பெண்களின் மார்பகங்கள் - அறிவியல் பார்வை


இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும்.

மேலே உள்ள படத்தில், மஞ்சள் பகுதி கொழுப்பு நிறைந்தது, பழுப்பு நிறத்தில் இருப்பவை ducts என்று சொல்லப்படும் குழாய்கள். நீல நிறத்தில் இருப்பது alveoli என்று சொல்லப்படும் மார்பகச் சுரப்பிகளாகும்.

ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும்.

ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும்.

ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப்படுத்தும்.