
பன்றிக்காய்ச்சல் என்றால் என்ன?
Type A influenza viruses(H1N1 subtype) என்ற வைரசுகளால் பன்றிகளுக்கிடையே அவ்வப்போது ஏற்படும் ஜலதோசம் தான். அப்புறம் பன்றியோடு அதிகம் தொடர்பு வச்சுக்கிட்ட மனுசங்களுக்கும், அந்த மனுசங்களோட தொடர்பு வச்சுக் கிட்டவங்களுக்கும் சில வேளைகளில் பரவும்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன?
சாதாரண ஜலதோசக் காய்ச்சல் போலத்தான் அறிகுறிகள் இருக்கும்.( அ..ஆச் ப்ர்ர்ர்ர்ர் ..க்கும் ..)
ஆனால் சாதா ஜலதோசம் , காய்ச்சல் எல்லாம் பன்றிக்காய்ச்சலும் அல்ல.
* காய்ச்சல் 100°F அல்லது 37.8°C க்கும் அதிகமாக இருக்கும்.
* தொண்டை வலி ,உடல் வலி ,தலை வலி,குளிர்,அசதி இருக்கும்.
* இருமல், மூக்கு ஒழுகுதல் இருக்கும்
* சிலருக்கு வயிற்றோட்டம் .வாந்தி கூட இருக்கலாம்.
சில குறிப்பிட்ட சோதனைகள் மூலம் இது சாதார காய்ச்சலா அல்லது பன்றிக் காய்ச்சலா என அறிய முடியும்.
ஆபத்தான அறிகுறிகள்:
குழந்தைகள் மேற்கண்ட அறிகுறிகளுடன் வேகமா சுவாசித்தாலோ, மூச்சு விட கஸ்டப்பட்டாலோ,தோல் நிறம் நீலமாக மாறினாலோ,போதுமான தண்ணீர் அருந்த முடியாவிட்டாலோ,கண்ணு முழிக்க முடியாமல் சோர்ந்து போய்
கிடந்தாலோ,உடலில் சின்ன சின்ன கொப்புளங்கள் வெளிப்பட்டாலோ உடனே மருத்துவ உதவி நாடவும்.
பெரியவர்களுக்கு சுவாசிக்க கஸ்டமாக இருந்தாலோ , நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வலி அல்லது அழுத்தம், திடீரென உடல் தளர்ந்து விடுதல், மனக்குழப்பம், இடைவிடாத வாந்தி காணப்பட்டால் உடனே மருத்துவ உதவி நாடவும்.
எப்படி பரவுகிறது?
ஜலதோசம் எப்படி பரவுகிறதோ அது போலத்தான் இருமல், மற்றும் சளி மூலம் தான் இந்த கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது.ஒருவருக்கு இதன் அறிகுறிகள் வெளிப்பட ஒரு நாள் முன்னதாகவோ காய்ச்சல் வந்து ஏழு நாட்கள் வரை பிறருக்கு தொற்றக்கூடும்.
எப்படிங்க தடுக்கிறது?
* மூக்கு ஒழுகுபவர்களை கண்டால் ரூட்டை மாற்றி எஸ்கேப் ஆகி விடுவது முன் ஜாக்கிரதை.
* சும்மா சும்மா ஹாய் என்று கர்சீஃப் வைத்திருப்பவர்களிடம் கை கொடுக்காதீர்கள்.அப்படி கொடுத்தாலும் அந்தக் கையைக் கொண்டு கண்,மூககு,வாயைத் தொடாதீர்கள்.
* கைகளை நன்றாக அடிக்கடி சோப் போட்டு கழுவுவது நல்லது.
* நல்லா தூங்கி போதுமான ரெஸ்ட் எடுத்து நல்ல ஆரோக்கியத்தை பேணுங்க.
* சுறுசுறுப்பா இருங்க.
* டென்ஸன் , மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
* சத்தான உணவு உணணுங்கள்.
* அசுத்தமான இடங்களில் கை வைக்காதீர்கள்.
* பன்றிப் பண்ணைகளுக்கு தேவையில்லாமல் போகாதீர்கள்.
* நன்றாக வேகாத பன்றி இறைச்சி உண்பதால் பரவக்கூடும். பன்றி உணவை தவிர்த்தல் நலம். (ஆச்சரியம்! இஸ்லாம் பன்றிகளை தவிர்க்க அன்றே அறிவுறுத்தியிருக்கிறது)
தடுப்பு மருந்து இருக்கிறதா?
இந்த வகை வைரசுகள் தங்கள் அடையாளத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு புதிய வகை வைரசுகளாக மாறுவதால் குறிப்பிட்ட வைரசுக்கான தடுப்பு மருந்து உருவாக்குவதில் சிரமமிருக்கிறது. முயற்சி வெற்றி பெறும்
என்ன மருந்துகள் உள்ளன?
ஃப்ளு காய்ச்சலுக்கான பொதுவான ஆன்டி வைரல் மருந்துகள்.சில நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. அவற்றில் இரு வகைகள் உள்ளன 1) adamantanes 2) inhibitors of influenza neuraminidase(oseltamivir and zanamivir)
பன்றிக் காய்ச்சலுக்கு சிகிட்சையும் மருந்தும் தாராளமாக இருக்கிறது. பன்றிக்காய்ச்சல் வந்தால் யாவரும் கண்டிப்பாக இறந்து விடுவதாகப் பயப்பட வேண்டாம். சமயத்தில் சிகிட்சையின்றி மோசமாக பாதிக்கப்பட்டாலே மரணத்தை நோக்கி தள்ளப்படுவார்கள்.