வழிவழிக் கதை#1
உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட துவங்கிய உடன் நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு போவதை நிறுத்த வேண்டும்.
உண்மை விபரம்:உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் நீங்கள் பள்ளிக்குப் போவதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. மாதவிடாய் ஏற்படுவதானது நீங்கள் வயதிலும், அறிவிலும் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. இதன் அர்த்தம் நீங்கள் பள்ளிக்குப் போவதை நிறுத்த வேண்டும் என்பதல்ல. உங்கள் மனமும் உடலும் முதிர்ச்சி அடையும் இந்த நேரம் கற்பதற்கான இன்றியமையாத காலமே.
வழிவழிக் கதை#2
மாதவிடாய் வரும்போது நீங்கள் தீட்டாகிறீர்கள்.
உண்மை விபரம்:இது உண்மையல்ல. மாதவிடாய் நாட்களின் போது நீங்கள் சற்று சுத்தக் குறைவாவாக இருப்பது போல் உணரலாம். ஆனால் மாதவிடாய் காரணமாக நீங்கள் தீட்டானவர்களாவதில்லை. இவ் மாதவிடாயானது பெண்களுக்கு மட்டுமே நடக்கக் கூடிய சக்திமிக்க அற்புதமான ஒன்று என்பதை நீங்கள் இப்போது உணர்ந்திருக்க முடியும். இது பின்னாளில் சந்ததிகளை உருவாக்குவதற்கு உதவுகிறது. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட நிகழ்வு எவ்வாறு தீட்டானதாக இருக்க முடியும்? மாதவிடாய் தீட்டானதல்ல என்பதால் மாதவிடாய் ஏற்படும் போது நீங்களும் தீட்டானவர்களல்ல.இதுதான் உண்மை.
வழிவழிக் கதை#3
உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் சமயத்தில் மற்ற்வர்களும் அதை பற்றித் தெரிந்துக் கொள்கிறார்கள்.
உண்மை விபரம்:யாராலும் உங்களை பார்த்தவுடன் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் Sanitary Napkin ( (சுகாதார துண்டு) அல்லது சுத்தமான துணியையோ உபயோகிக்காத பட்சதில் உங்கள் ஆடையில் கறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஒருவர் பார்த்து உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது என்று கூறமுடியும். ஆனால் இதையும் நீங்கள் உங்கள் ஆடைகளில் கறையுள்ளதா? என கவனமாக பரிசோதிப்பதன் மூலம் தவிர்க்க முடியும். அல்லாமல், நீங்கள் சொல்லாத பட்சத்தில், உங்கள் முகமோ, உடலோ உங்களுக்கு மதவிடாய் ஏற்பட்டிருக்கிறது என்பதை எவ்விதத்திலும் காட்டுவதில்லை. எனவே ஒவ்வொரு மாதமும் இந்த சமயங்களில் நீங்கள் வெட்கமோ கூச்சமோ இல்லாமல் நிமிர்ந்து பெருமையுடன் நடந்து செல்லுங்கள்.
வழிவழிக் கதை#4
உங்களுக்கு ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் ஏற்பட்டால் நீட்ங்கள் கன்னியல்ல என்று அர்த்தம்.
உண்மை விபரம்:பருவமடைந்த பின் முதல் சில வருடங்களுக்கு ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமாக நடக்கின்ற நிகழ்வே. எனவே இவ்வாறு ஒழுங்கற்ற சுழற்சி ஏற்படுவதால் நீங்கள் கன்னியில்லை என்று அர்த்தமல்ல. எனினும் நீங்கள் ஒரு ஆணுடன் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் நிலையில் உங்களுடைய மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். ஆனால் நீங்கள் ஆணுடன் உடலுறவு வைத்து கொள்ளாமல் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்டிருப்பது இயல்பான ஒன்றே. நீங்கள் உடலுறவில் ஈடுபட்டால் மட்டுமே கன்னித் தன்மையை இழக்கிறீர்கள். அல்லாமல், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியானது நீங்கள் கன்னியா இல்லையா என்பதை தீர்மானிப்பதில்லை.