இவைகள் எல்லாம் ப்ரீ - மென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் (Pre - Menstrual Syndrome) எனப்படும் மாதவிடாய் முன் நிகழும் ஒழுங்கு குலைவின் அறிகுறிகளாகும். தசைப் பிடிப்பு, முதுகு வலி, உப்பிப்போனது போன்ற உணர்வு, பசியில் மாற்றம், மார்பகங்கள் மென்மையடைதல் போன்றவையும் ப்ரீ - மென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோமின் (Pre Menstrual Syndrome) அறிகுறிகளாகும். இது முற்றிலும் இயல்பானது. எனவே நீங்ங்ள் அதை குறித்து பயப்பட வேண்டியதில்லை.
பருவமடையும் போது எல்லோரும் உடல் ரீதியாக ஒரே நேரத்தில் வளர்ச்சியடைகின்றனர்.
8 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் பருவமடைதல் நடைபெறுகிறது. யாருக்கும் இது குறிப்பிட்ட சமயத்தில் நிகழ்வதில்லை. இது சில வருடங்களினூடாக படிப்படியாக ஏற்படும் மாற்றமாகும். இம்மாற்றங்களானது வெவ்வேறு பெண்களுக்கு வெவ்வேறு காலங்களில் ஏற்படுகிறது. எனவே ஒப்பிடுவது தவறு.
பருவமடையும் போது நம் உடல் தோற்றத்தில் மட்டுமே மாற்றம் ஏற்படுகிறது.
நம் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதைப் போலவே உள்ளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு நமது மூளைக்கும் புனருற்பத்தி உறுப்புகளுக்கும் இடையே நடக்கும் செயல்பாட்டின் மூலம்தான் நமக்கு மாதவிடாய் ஏற்படுகிறது.முதல் சில வருடங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று ஏற்படுவது இயல்பானதே.
முதல் சில வருடங்கள் மாதவிடாய் ஒழுங்கற்று ஏற்படுவது முற்றிலும் இயல்பானதே. ஆனால் இது சில வருடங்களுக்கு அப்புறமும் நீடிக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.
மிகவும் சோகமானப் பெண்கள் மட்டுமே மாதவிடாயின் போது உணர்ச்சி வசப்படும் நிலைக்கு உள்ளாகின்றனர்.
அநேகமாக எல்லப் பெண்களுமே மாதவிடாயின் போது இவ்விதமான மனநிலை மாறுதல்களுக்கு உள்ளாகின்றனர்.இது Pre- Menstrual Syndrome என்ற மாதவிடாய் ஒழுங்கு குலைவின் அறிகுறியாகும்.மாதவிடாயும் சுகாதாரமும்:
மாதவிடாயின் போது ஒழுங்காக குளித்து உங்கள் உடம்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இது நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும், மாதவிடாயுடன் தொடர்புடைய வாடையை தடுப்பதற்கும் உதவும். மாதவிடாயின் போது தலைக்கு குளிப்பது தவறல்ல. உண்மையில் தலைக்கு குளிப்பத்தானது உங்களுக்கு சுத்தமாக இருக்கிறோம் என்ற புத்துணர்வை கொடுக்கும்.மாதவிடாயின் போது சில சமயங்களில் உங்கள் பிறப்புறுப்புகளிலிருந்து அதிகப்படியான வாடை வெளிப்படும். இது அசாதாரணமானதல்ல. மேலும் Sanitary Napkin (சுகாதாரத் துண்டுகள்), தூய்மையானத் துணிகள் உபயோகிப்பது மாதவிடாயானது உங்கள் ஆடைகளை கறையாக்குவதை தடுக்கும்.
Sanitary Napkins (சுகாதாரத் துண்டுகள்) மற்றும் துணிகள்:
நீங்கள் Sanitary Napkins (சுகாதாரத் துண்டுகள்), உபயோகிக்கும் பட்சத்தில், ஒழுக்கு அதிகமாக இருக்கும் நேரங்களில், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை அவற்றை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் உடம்புக்கும் Pad' க்கும் இடையில் உள்ள கதகதப்பான ஈரத்தில் பாக்டீரியாக்கள் வளருவதை தடுக்க முடியும்.
இந்த Pad' களை கழிவறைகளிலோ, தெருக்களிலோ போடாதீர்கள். மாறாக அவற்றை பேப்பரில் சுற்றி கழிவுக் கூடையில் போடவும். துணியை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவற்றை தண்ணீரில் சோப்பு கொண்டு நன்றாக கழுவி உலர்த்துவதென்வது மிக முக்கியமானது. நீங்கள் ஈரத்துணியை உபயோகித்தால் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயத்திற்கு உள்ளாவீர்கள்.
உங்கள் மாதவிடாயைப் பற்றி தெரிந்துகொள்ளுதல்:
மாதத்திற்கு மாதம் உங்கள் மாதவிடாய் பற்றி சரியாக தெரிந்து வைத்திருப்பது நல்ல விசயம். இந்த வகையில் நீங்கள் உங்களை மாதவிடாய்க்காக தாயார்படுத்திக் கொண்டு Napkin அல்லது துணிகளை தயாராக வைத்திருக்க முடியும். உங்களுக்கு உங்கள் மாதவிடாய் எப்போது வரும் என்று தெரிந்திருந்தால் உங்கள் மனநிலை மாற்றங்களும், உடலளவில் ஏற்படும் அறிகுறிகளும் ஏன் ஏற்படுகிறதென்று தெரிந்து கொள்ள முடியும்.மனநிலை மாற்றங்கள்:
பருவமடையும் போது உடம்பின் உள்ளும் வெளியும் ஏற்படும் ஏராளமான மாற்றங்களைப் பற்றி நாம் பேசியிருக்கிறோம். மேலும் மாதவிடாயின் போதும்,அதன் முன்னும் Pre-Menstrual Syndrome காரணமாக ஏற்படும் மனநிலை மாற்றத்தைப் பற்றியும் பெசியுள்ளோம். ஆனால் நாம் வளர்கிற மற்றும் பருவமடைகிற நிகழிச்சி போக்கின் போது ஏற்படும் உணர்ச்சிகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் மாதவிடாய் ஏற்படும் சமயத்தின் போது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் ஏற்படலாம்.நீங்கள் வளர்ந்து கொண்டிருந்தாலும் பெரியவர்களாகி கொண்டிருக்கிறேன் என உணர்ந்தாலும், நீங்கள் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் உணர்வுகள் உங்கள் உடல் வளர்ச்சிக்கு ஈடாக வளர்வதற்கு விட வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இந்த சமயத்தில் நீங்கள் ஏராளமான ஆவலேற்படுத்தக் கூடியதும்,பயமேற்படுத்த கூடியதுமான.
மனக் கொந்தளிப்புகளை (Emotions) உணர முடியும் நீங்கள் பொறுமையை கடைபிடித்தால் அவை நிலையானதாகவும், நீடித்ததாகவும் தோன்றாமல் இரூக்கும். பருவமடையும் போது உங்கள் மனக் கொந்தளிப்புகள் உச்சத்தை அடையும் என்பதையும், அவை எப்போதைக்குமாக நீடிக்கப் போவதைப் போல் தோன்றும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
ஆனால் நீங்கள் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு மற்றவர்களுடன் உங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டு, கண்மூடித்தனமாக முடிவெடுக்காமல் இருந்தால், இந்த மனக் கொந்தளிப்புகள் வந்ததைப் போலவே வேகமாகப் போய் மறைவதை நீங்கள் உணரமுடியும்.
உங்கள் உணர்ச்சிகளில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்:
ஆண்கள்பால் கவர்ச்சியும், போதுவான காம உணர்ச்சியும் உங்களுக்கு ஏற்பட துவங்குகிறது சில சமயங்களில் நீங்கள் உங்களைப் பற்றி தாள்வாக எண்ணும் அனுபவம் ஏற்படும். பல்வேறுவிதமான உணர்ச்சி கொந்தளிப்புகளால் நீங்கள் அமிழ்த்தப்படுவீர்கள். இந்த உணர்ச்சி கொந்தளிப்புகளை உங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்வதால் அடிக்கடி சோகமாக காணப்படுவீர்கள்.பாலுணர்ச்சிகள் பற்றி:
உங்களுக்குள் உருவாகத் தொடங்கும் பாலுணர்ச்சியானது பருவமடையும் போது உங்களுக்கு ஏற்படும் பல விசயங்களில் ஒன்றாகும். இதுவும் ஒரு இயல்பான நிகழ்வே. நமது கலாச்சாரத்தில் ஆண்கள் மட்டுமே பாலுணர்ச்சிக் கொண்டு அதை வெளிபடுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள். ஆனால் இது ஒரு வழிவ்ழியாக வரும் கட்டுக் கதையாகும்.உண்மை விபரம் என்னவெனில் பெண்களும் பாலுணர்வு கொண்டுள்ளனர். இது இயல்பான ஒன்றுதான். ஆண், பெண் ஆகிய இரு பாலருமே பருவமடையும் போது கிளர்ந்தெழும் பாலுணர்ச்சியை உணர ஆரம்பிக்கின்றனர். எதிர்பாலரை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும், அவர்களுடன் பேச விரும்புவதும் அல்லது அவர்கள் பக்கத்தில் இருக்க விரும்புவதும் பொதுவாக இருக்க கூடிய உணர்வேயாகும்.