கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்துவிடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வர வேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.