ஆண்களின் பருவ உடல் மாற்றம் எப்படி இருக்கும்?


ஆண்களின் பருவ உடல் மாற்றம் சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதினான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம்.ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்றங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஹார்மோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கும்போது பருவம் ஆகும்நிலை ஏற்படுகிறது.

ஹார்மோன்கள் என்றால் என்ன?
ஹார்மோன்கள் உடலிலிருந்து சுரந்து பருவம் ஆகி வளர்ச்சியுற்று சிறுபிள்ளை நிலையிலிருந்து மனிதனாகச் செய்கின்றன. ஹார்மோன்கள் உங்கள் இன விருத்திக்கான அமைப்பை உருவாக்கி பிள்ளைகளைத் தோற்றுவிக்க உதவுகின்றன. அதாவது பருவமாகி தந்தை நிலை அடையச் செய்கிறது.

ஹார்மோன்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பையனுக்குக் கூடுதலான பெண்ணுக்குரிய ஹார்மோனான எஸ்ரஜினைச் செலுத்தினோமாயின் அவனுக்கு மார்பகங்கள் ஏற்பட்டு வளர்ச்சியுற்று தாடி உரோமங்கள் அகல ஆரம்பிக்கும். அதேபோல பெண்ணொருத்திக்கு ஆண்களுக்குரிய ஹார்மோனான அன்ட்றொஜன் கூடுதலாகச் செலுத்துவோமாயின் அவள் மார்பகங்களை இழந்து முகத்தில் உரோமங்கள் தோன்றி குரலும் கரகரப்பாகிவிடும்.

ஆண்களில் காணப்படும் முதல் மாற்றம் என்ன?
பருவமானவர் என்பதைக் காட்ட விதைகள் வளர்ச்சியுற்று, பெருத்து சற்று கீழ் இறங்கும். இரண்டில் ஒன்று சிறிது கீழ்முகமாக இறங்கித் தொங்கத் தொடங்கும். இது சராசரி வயது பன்னிரண்டாக இருக்கும் போது ஏற்படுகிறது. விதைகளைத் தாங்கும் விதைப்பை சற்று கருமை நிறமடைகிறது. அதேநேரம் முரட்டுத் தன்மையைப் பெறுகிறது. ஆண்குறியும் பெருத்து விடுகிறது.

விதைகள் பெருப்பதேன்?
விதை ஒவ்வொன்றிலும் இருநூற்று ஐம்பது சிற்றறைகளுண்டு. இவற்றில் இறுக்கமாய் சுருண்ட குழாய்களுண்டு. இவை விந்து களைத் தயாரிக்கின்றன. இவை பருவமாகின்ற போது வளர்ச்சியுறுவதனால் விதைகள் பெருக்கின்றன. இந்தச் சிறு குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக நீட்டிப் பிடித்தோமாயின் கிட்டத்தட்ட அரை கிலோ மீற்றர் நீளம் இருக்கும். இந்தக் குழாய்களை வெளியே எடுத்து நீட்ட முடியாது. அப்படிச் செய்ய இயலுமாயின் பருவமான ஆண்கள் தம்முடையவை மற்றவரைக் காட்டிலும் ஏன் நீண்டுள்ளது என்று போட்டி போடத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் விதைகள் பருவம் ஆனபின் அநேக காரியங்களைச் செய்ய வேண்டி உள்ளன. அவை ஹார் மோன்களைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்து கொண்டு ஆண்களாகத் தொடர்ந்து இருக்க செயல்பட வேண்டும். அதோடு உங்களுக்குத் தேவையான விந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

விந்துகள் என்றால் என்ன?
விந்து என்பது மிக நுண்ணிய கலங்களை உரியன. சகல உயிரியல் தகவல்களையும் தமக்குள் அடக்கி உள்ளன. இதன் காரணமாகத்தான் உரியவனின் பிரதியைப் பெற முடிகிறது. விந்து பெண்ணின் கருமுட்டையோடு இணையும் போது குழந்தை உருவாகிறது. பெண் கர்ப்பிணியாகிறாள்.

விதைகள் கீழ்முகமாக இறங்குவதேன்?
உடல் வெப்பநிலை கூடுதலாக இருப்பதனால் அந்த வெப்ப நிலையில் விந்துகள் தயாரிக்க இயலாது. அதன் காரணம் அவை சற்று இறங்கித் தொங்க வேண்டியுள்ளன. அப்பொழுது ஓரளவு குளிர்ச்சியாக இருக்கின்றன. விந்து உருவாகின்றன. குளிர்காலங்களிலும் பயந்து நடுங்கும் போதும் விதைகள் உடலை நோக்கிச் சரிகின்றன. சூழல் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் உடல் வெப்பநிலை அதிகரித்து சுகவீனம் உற்று இருக்கும் போதும் வெந்நீரில் குளித்து இருக்கும் போதும் விதைகள் உடலிலிருந்து விலகித் தொங்கும். அவற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவே இவ்வாறு ஏற்படுகிறது.

ஒருவன் காய்ச்சலாய் இருக்கும்போது தற்காலிகமாக விந்தற்றவர்கள் ஆகி விடுவர். அந்நேரங்களில் பெண்களைக் கர்ப்பிணிகளாக்க முடியாதிருப்பர். இதனை நன்கு அறிந்த பழங்குடியினர் பாலுறவு வைத்துக் கொள்ளுமுன் விதைகளை சுடுநீரில் நீண்ட நேரம் ஊறவிடுவர். இதனால் கர்ப்பம் தரிப்பது தடைப்படும்.

ஏன் ஒரு விதை மற்றதைக் காட்டிலும் கீழ்முகமாகத் தொங்குகிறது?
இதற்குக் காரணம் இடப்பிரச்சினையே. இரண்டும் இரண்டு கால்களுக்கு இடைப்பட்ட இடத்தைப் பங்கு போடும்போது பாதுகாப்புக்கருதி ஒரே வரிசையில் இருக்காது சற்று மேலும் கீழுமாக அமைந்து உள்ளன. இதனால் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.


ஆண்குறி புடைத்து எழ ஆரம்பிப்பது எப்போது?
புடைத்து எழுவது முள்ளந்தண்டின் கீழ்ப்பகுதியிலுள்ள நரம்புத் தொகுதி செய்திகளை அனுப்ப ஆண் குறியிலுள்ள இரத்தக் கொள் கலன்களில் இரத்தம் வேகமாக உந்தப்படுகிறது. இரத்தம் நிரம்பி யதும் ஆண்குறிக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் மேலதிக இரத்தம் திரும்பிப் போகின்றது. இரத்தம் நிரம்பி விடுவதால் ஆண்குறி பெரிதாகி புடைத்து எழுகின்றது. உடலுக்கு வெளிப்புறமாக புடைத்து எழுந்து நிற்கின்றது. செங்குத்திற்கு மேலாக நிற்கும். அதே சமயம் சற்று கருமை நிறத்தையும் அடைகின்றது.பலவிதமான தூண்டுதல்களும் கூட புடைத்தெழச் செய்கின்றன.கால்சட்டையோடு ஆண்குறி உராயும் போதும், பாலியல் எண்ணங்கள் ஏற்படும் போதும் புடைத்தெழுகிறது.காரணம் எதுவுமின்றியும் புடைத்தெழுகிறது.இது திடீர் புடை எழுதலாகும். இயற்கை முன்கூட்டியே பயிற்சி ஒன்றை அளிக்கிறது.உங்களுக்கு பயங்கரமான அனுபவம் உண் டாகிறது. நேரம் கெட்ட நேரத் திலும் ஏற்படுகிறது. உங்களு க்கு பாலியல் வெறி ஏற்பட்டு விட்டதோ என்று பயப்பட வேண்டாம். இப்படியான புடை த்து எழுவதனால் எவ்வித தீமைக்கும் இடம் இல்லை. உங்களுக்கு புடைத்து நிற்கும் நிலை ஏற்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள்.இத்தகைய திடீர் புடைப்புகள் ஏற்படும் போது பையன்கள்தான் சங்கடப்படுகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் புடைத்து எழுவதைப் பற்றிப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது. துருவித் துருவிப் பார்க்கின்ற பெண்களுக்குக் கூட இது பற்றித் தெரியாது.


பையன்களுக்கு எப்போது திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது?
சுமார் பதின் மூன்று வயதாயுள்ளபோது அதாவது விதைகள் வளர்ச்சியுறத் தொடங்கும்போது பையன்களுக்கு பெண்களை விட வேறுபட்டு இத்திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. பையன்கள் மிகவும் உயரமாக வளர்ந்து விடுகிறார்கள். ஆண்களின் உடல்கள் பெண்களைக் காட்டிலும் வளர்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கின்றன. ஆண்களுக்கான ஹார்மோன்கள் மற்றைய மாற்றங்களுக்குத் தேவைப்படுகின்றன. வளர்ச்சி ஹார்மோன்கள் பையன்களின் தோள்களை அகலப்படுத்தி தொண்டைக் கருகிலுள்ள சுவாசக் குழாயையும் விசாலப்படுத்தி குரலைக் கடுமையாக்குகிறது. தசைகளை வளரச்செய்து, முகத்தில் ரோமத்தை வளர்க்கிறது. பையன் வளர்ந்து மனிதனாக மாறி விடுகிறான். இந்தத் திடீர் வளர்ச்சியின் போது முகத்தில் மூக்கு பெரிதாக வளர்கிறது. உடல் மெலிந்து விடுகிறது. கால்களும் பெருத்து விடுகின்றன. மற்றைய அவையங்களும் கால கதியில் வளர்ச்சியுறும்.இந்தத் திடீர் வளர்ச்சியின்போது ஒன்றை அவதானித்திருப்பீர்கள். உங்களுக்கு சற்று கூடுதலான நித்திரை தேவைப்படும். பாடசாலைக்குப் போக வேண்டாத நாட்களிலும் பாடசாலையிலிருந்து திரும்பி வந்ததும் உறங்க வேண்டும் போலவிருக்கும். ஏனெனில் வளர்ச்சி ஹார்மோன்கள் உறங்கும் நேரத்தில்தான் கூடுதலாகச் செயல்படு கின்றன.

உங்களுக்குப் பயங்கரமான உணவுப் பிரியம் ஏற்பட்டிருப்பதை உங்கள் தாயார் குறிப்பிடுவார். சிறுவயதைவிடவும் இப்போது புதியதும் நிறமானதுமான காய்கறிகளை விரும்புவதைக் காணலாம். ஏனெனில் நீங்கள் தற்போது வளர்ந்துள்ளீர்கள். உங்கள் உடல் காய்கறிகளிலுள்ள இயற்கையான நச்சுத்தன்மையை நடுநிலைமை ஆக்கக் கூடியனவாகி விட்டது.அதனால் அவை நச்சுப் பொருள்களை உருவாக்கி விரும்பி உண்ண விடாது செய்கின்றன.

உடல் வளர்ச்சிக்குக் காரணமான அதே ஓமோன்கள் தான் வளர்ச்சிக்கும் முற்றுவைக்கின்றன. முடிவு என்றால் எலும்புகள் பூரண வளர்ச்சியை அடைந்து விட்டன. மேலும் நீண்டு விட இடமில்லை. இறுதியான உருவத்தை அடைந்து விடுகின்றன.

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?
விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடைய ஆரம்பிக்கின்றன.இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.

ஒரு சுவாரஸ்யமான மாறுதல்.சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஹார்மோன் செய்வது என்ன வென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்புகள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி அடைவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது.முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருது வாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.

இதற்குப் பிறகுதான் பூப்புமயிர் தோன்றுகிறது. இது ஆண் குறியின் அடிப்பகுதியிலும் விதைப் பையின் மீதும் பூப்பு மயிர் முளைக்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்பு மயிர்தான். இத னைக் கண்டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம் நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.

சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?
இந்தக் கட்டத்தில்தான் மாற்றங்கள் துரிதகதியில் நடைபெற ஆரம்பிக்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம் பெறுகிறது. வெளியேற்றம் என்பது விரும்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளியேற்றத்தை ‘வந்துவிட்டது’ என்பர்.

பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசைகளின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர்போக்குப் பாதையூடாக வெளி வருகிறது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்தகைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி – இன்ப அதிர்ச்சி ஆகியவை யில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபி த்து விடுகிறது. விந்து வெளியே றியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. சில வேளைகளில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.

பதினான்கு வயதாய் உள்ள போது ஆண்குறி பெரியதாகி அகலுகிறது. அதேநேரம் விதைப்பையும் பெரிதாகிறது. ஆனால் ஆண் குறியும் விதைப்பையும் வளர்ச்சியுற்ற போது போலக் கருநிறம் அடைவதில்லை.இதே காலக்கட்டத்தில் பூப்புமயிர் கருமையாகும் போது சுருளுகிறது.

உடல் முழுமையான வளர்ச்சி அடைந்தபின் என்ன நடைபெறுகிறது?
முக்கியதொரு திருப்புமுனை இதுதான். இந்நிலையில்தான் வேகத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. இது வரை மிக மிக வேகமான வளர்ச்சியை அடைகிறீர்கள். இக்கட்டத்தில் திடீர் வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. உங்கள் சராசரி வயது பதினைந்தரையாகும் போது வளர்ச்சி முற்றுப் பெறுகிறது. அதன் பின்பும் கூட சுமார் இரண்டு அங்குலம் உயர்வீர்கள். இத்துடன் உயரவளர்வது நின்றுவிடுகிறது. ஆனாலும் இது மிகவும் மெதுவாக நடக்கிறது.விதை தொடர்ந்து வளரும். இது பதினாறு வயதை அடையும் வரை நடைபெறுகிறது. பெரிதாகிறது. விதைப்பையும் கருமை நிறமாகிறது.பூப்புமயிர் தடிப்பாகிக்கொண்டே இருக்கும். பதினெட்டாம் பிராயம் வரும் வரை அது தடிப்படைந்து வயிற்றின் கீழப் பகுதி தொப்புள் வரை பரவும் வரை வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். சில நேரங்களில் தொடைப் பகுதியிலும் நடைபெறும்.அநேக பையன்களுக்கு அவர்களின் கால்களிலும், கை அக்கிளிலும், தோள்களிலும் முதுகுகளி லும் தடித்த கருமையான உரோம வளர்ச்சி காணப்படும்.

பையன்களின் முகங்களில் எப்பொழுது உரோமம் தோன்றத் தொடங்குகிறது?
சராசரி வயது பதின்னான்கைக் கடந்த பிறகே முதலில் மேலுதட்டின் ஓரங்க ளிலும் பின்பு கன்னப் பகுதியிலும் மீசை யின் பிறபகுதியிலும் இறுதியாக நாடி ப்பகுதியிலும் வளரத்தொடங்குகிறது.

பதினாறு பதினேழு வயதை அடைந்த பிறகும் கூட பருவம் ஆகாவிட்டால் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு இத்தகைய திடீர் வளர்ச்சி காணப்படாவிட்டால் பொறுத்திருந்தால் போதும். நீங்கள் கவலைப்படுவதாயின் ஒரு குழந்தை வைத்தியரை அணுகுங்கள். ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது.உங்களுக்கு சில ஹார்மோன் மருந்துகளைச் பரிந்துரை செய்வார்கள்.