ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்கள்

பெண் இனப்பெருக்க அங்கம்

பெண் இனப்பெருக்க தொகுதியே ஒரு பெண்ணின் இனப்பெருக்க சக்கரத்தை பேணும் தொகுதியாகும்.இது முக்கியமாக முட்டை உற்பத்தியையும், வளரும் சிசுவை தாங்குவதையும் செய்யும்.




பெண் இனப்பெருக்க உறுப்புக்களில் வெளிப்புறமாக காணப்படும் உறுப்புகள் யோனி துவாரத்தை பாதுகாக்கும்.
  • பெரிய யோனி மடல்- வெளிப்புறமாக காணப்படும் மடிப்புக்களாகும். இதன் வெளிப்புறம் ரோமம் கொண்டிருக்கும்.
  • சிறிய யோனி மடல்- இது பெரிய யோனிமடலுக்கு சமாந்தரமாக அதனுள் காணப்படும் சிறிய மடிப்புகளாகும். இதில் உண்ர்ச்சி கூடிய நரம்புகள் காணப்படுகின்றன.
  • பெண் குறி-  இது சிறிய யோனி மடலின் மேற்பகுதியில் காணப்படும். இது மிகவும் உணர்ச்சி கூடிய நரம்புகளை கொண்டிருக்கும்.
  • மென்சவ்வு- இது யோனி துவாரத்தை மூடி காணப்படும். முதல் உடலுறவின் போது இது கிழியும்.
  • யோனி துவாரம்- இது ஓர் குழாய் போன்ற கட்டமைப்பு, நன்றாக விரிவடையக்கூடியது. உடலுறவின் போது ஆண்குறி செலுத்தப்படும் இடம். பிரசவத்தின் போது குழந்தை வெளியாகும் இடம்.
  • கருப்பை கழுத்து-  இது கருப்பையின் மிகவும் கீழுள்ள பாகமாகும். கருக்கட்டலின் போது விந்துகள் கருப்பைகழுத்தினூடாக கருப்பையை அடையும்.
  • கருப்பை- இது ஒர் பலமிக்க, தசைமிக்க அங்கமாகும். குழந்தையை தாங்கும் அங்கமாகும். இதன் உட்புறசுவர் மாதவிடாயின் போது, இழக்கப்படும் கருக்கட்டல் நடந்தால்; உட்பதித்தல் நடைபெறும்.
  • பலோப்பியின் குழாய்கள்- கருப்பையிலிருந்து இரு புறமும் செல்லும் குழாய்கள் காணப்படும். இது முட்டை, விந்து அசைவுக்கு உதவும். கருக்கட்டப்பட்ட முட்டையும் மீண்டும் கர்ப்பபையை வந்தடையவும் குழாய்கள் உதவும்.
  • சூலகங்கள்- முட்டை விருத்தி நடக்கும் இடம். ஒவ்வொரு சக்கரத்தின் போதும் ஒரு முட்டை வெளியேற்றப்படும். ஒவ்வொரு பெண்ணும் ஒரு மில்லியன் விருத்தியடையாத முட்டைகளுடன் பிறக்கிறாள். புதிய முட்டைகள் விருத்தியாகாது. எனவே, வயதுடன் பெண்ணின் கருக்கட்டும் திறனும் குறைகிறது.


ஆண் இனப்பெருக்க அங்கம்

  • ஆண்குறி- ஆண் இனப்பெருக்க தொகுதியின் முக்கிய அங்கம். உடலுறவின் போது, யோனி துவாரத்தினுள் விந்துக்களை இடுவது இதன் முக்கிய காரியமாகும்.
  • சிறுநீர்காண்– சிறுநீர்ப்பை மற்றும் சுக்கிலம் போக்குவரத்து
  • சிறுநீர்ப்பை – சிறுநீர் சேமித்து வைத்தல்
  • புரொஸ்டேட் சுரப்பி – சுக்கில உற்பத்தி
  • விந்து குழாய் – விதைகளிலிருந்து விந்துக்களை போக்குவரத்து செய்தல்
  • விதைகள் – இரண்டு காணப்படும். பூப்படைந்த பின் விந்து உற்பத்தி செய்யும் இவை தினமும் மில்லியன் கணக்கில் விந்துக்களை உற்பத்தி செய்யும்.