நோயுள்ள கோழியின் கழிவில் உள்ள கிருமி சரியாகக் கழுவாமல் முட்டையை உடைப்பதால் முட்டைக்குள் சென்று நோயை உண்டாக்குகிறது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் உடையாத முட்டையிலிருந்தும் நோய் பரவுமாம்.
கோழிமுட்டையிலிருந்து நோய் எப்படிப் பரவுகிறது?
உடைந்த கோழி முட்டை மூலம், உடையாத முட்டையில் சிறு துவாரங்கள் உள்ளன- அவற்றின்மூலம் கிருமி உள்ளே சென்றிருந்தால்,நோயுள்ள கோழியின் வயிற்றில் முட்டை உருவாகும் போதே!
நோய்க்கிருமியின் பெயர் என்ன?
சால்மனெல்லா (Salmonella Enteritidis )சால்மனெல்லா நோயுள்ள கோழிமுட்டையால் என்ன விளைவுகள் ஏற்படும்? உண்ட 12-72 மணி நேரத்தில் காய்ச்சல், வாந்தி,அடிக்கடி மலம் போதல், வயிற்று வலி ஏற்படும். 4 லிருந்து 7 நாட்களுக்கு இந்த வியாதி இருக்கும். சாதாரணமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்க்குப் போதும்.
இந்த நோய் வராமல் காத்துக்கொள்வது எப்படி?
முட்டையை குளிர்பதனப்பெட்டியில் பாதுகாக்கவும்.உடைந்த முட்டையை உண்ண வேண்டாம். முட்டையை நன்கு வேக வைத்துச் சாப்பிடவும்.2 மணி நேரத்துக்கு மேல் முட்டையை குளிர்பெட்டியிலிருந்து அறையில் வெளியில் வைக்க வேண்டாம்.பச்சை முட்டை சாப்பிட வேண்டாம்.
சால்மனெல்லாவால் யார் யாருக்கு ஆபத்து?
குடலை முதலில் இது பாதிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.இது இரத்தத்தில் கலந்தால் ஆபத்து. குழந்தைகள், வயதானவர்கள், கல்லீரல் வியாதி உள்ளவர்கள்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இது கடுமையாக பாதிக்கும்.