உடல் எடையை குறைக்கும் யோகாசனம்..!!


ஆதிகாலத்தில் பதஞ்சலி முனிவரால் (கி.மு. 300) உருவாக்கப்பட்ட யோகா எட்டு அங்கங்களைக் கொண்ட அஷ்டாங்க யோகாமாகும். அவை; யமம், நியம்ம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி ஆகும். இவற்றுள் யமம், நியமம் மற்றும் சமாதி இம்மூன்றும் நமது மனதைக் கட்டுப்படுத்தவற்கான அடிப்படை வழிமுறைகளாகும்.

தியானம் நமது மனதினை உறுதி செய்து, உணர்ச்சகளைக் கட்டுப்படுத்தும் என்பதை நாம் ஏற்கனவே அறிந்தது. நமநு உணவுப் பழக்கத்தை நாம் உறுதியுடன் பராமரிக்க தியானம் ஒரு சிறந்த சாதனமாகும்.

யோகாசனம் என்று இன்று மிகவும் பிரபலமாக அறியப்படும் யோகா பயிற்சியானது நமது உடலுக்குப் புத்துணர்ச்சியையும், தசைகளுக்கு வலிமையையும் அளிப்பதோடு, நமது உடலில் ஒரு குறிப்பிட்டப் பகுதியிலுள்ள கொழுப்பை நீக்கவும் செய்கிறது. யோகாசனங்கள் நமது தொப்பையைக் குறைக்கும்.

சில யோகாசனங்கள் நமது பிருஷ்டம், முகவாய் கட்டை மற்றும் கன்னங்களிலுள்ள கொழுப்பை அகற்றும். உடல் பருமன் காரணமாக மூட்டுகளுக்கு வந்த பாதிப்புகளை யோகாசனம் நீக்கி, மூட்டுகளில் நல்ல குழைவுத் தன்மையை உண்டாக்கும். உடல் பருமனைக் குறைக்க பல ஆசனங்கள் உள்ளன. ஆயினும் உடல் பருமன் உள்ளவர்கள் செய்வதற்கென்றே 16 அசைவுகளைக் கொண்ட ஓர் ஆசனம் உள்ளது.

அதன் பெயர் "சூரிய நமஸ்காரம்" என்பதாகும். உடல் பருமனைக் குறைக்க, ஒரு நாளைக்கு பத்து சூரிய நமஸ்காரங்கள் செய்தல் நன்றாம். ஆனால் இந்த ஆசனத்தின் எண்ணிக்கையை முதலில் ஒன்றிலிருந்து தொடங்கி படிப்படியாக அதிகரித்துக்கொள்ள வேண்டும்.