மாதவிடாய் பிரச்சினைகளுக்கு:
- விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.
- மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.
- சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.
- அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.
- பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.
ரத்த மூலத்திற்கு பிரண்டை:
- இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.
- இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:
- பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.
- கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
- குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.
- அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.
பல் வலியைத் தீர்க்க:
- பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.
- பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.
- கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.
- பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.