ஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது?


ஒரு ஆணோ, பெண்ணோ பிறக்கும்போதே ஓரினச் சேர்க்கையாளராக பிறக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது ஓரினச் சேர்க்கை ஆசை உடையவர்களின் மூளை பிறக்கும்போதே மற்றவர்களின் மூளையை விட வித்தியாசமாக இருப்பதால், இது போன்ற ஆசை உடையவர்களாக இருக்கிறார்கள். அதே போல, இது போன்றவர்களின் டி. என் ஏ எனும் மூலக்கூற்றிலும் சில மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடித்து உள்ளனர்.

இதற்கு எதிராக, ஓரினச்சேர்க்கையாளர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதற்காக பல சூழ்நிலை காரணங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். ஏன் ஆண்கள் ஆண்களை விரும்புபவர்களாக ஆகிறார்கள், ஏன் பெண்கள் பெண்களை புணர விரும்புகிறார்கள் என்பதற்கு சிறு வயதில் ஏற்படும் நிகழ்வுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.

உதாரணமாக:
சிறு வயதிலேயே ஹோமொசெக்சுக்கு பெரியவர்கள் உடன்பட வைத்தல்.
ஆண் பிள்ளைகள் பெண்களோடு மட்டுமே விளையாடுதல் அல்லது பெண் குழந்தைகள் ஆண்களோடு மட்டுமே விளையாடுதல்.
விடலைப் பருவத்தில் விளையாட்டாக ஹோமோசெக்ஸ் செய்தல்.

ஓரினச்சேர்க்கையை பல நாடுகள் இன்னும் மதம், கலாச்சாரம் போன்ற பெயர்களை சொல்லி தடை செய்து உள்ளன. சில நாடுகளில் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். ஏன், மரண தண்டனை கூட வழங்கப்படுகின்றது.