குழந்தை பெறாமலே மார்பகங்களில் பால் வருமா?


பால் சுரக்கும் செல்கள் பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland ) உள்ளன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த சுரப்பிக்கும் ஹைபோதலாமஸ் (hypothalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப் படுவதால் ஏற்படும் நிகழ்வே இது.

காரணங்கள்:
  • பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ( tumor) இருத்தல்.
  • தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாற்றங்கள்
  • மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலும் இது போல பால் கசிய வாய்ப்பு உள்ளது.

கீழே சொல்லும்படியாக உங்கள் நிலை இருந்தால், இது ஒரு சாதாரணமான நிகழ்வே:
  • சிறு வயது (இருபதுக்கு கீழே)
  • குறைந்து அளவு பால் கசிதல்
  • இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருத்தல்
  • வேறு மார்பகப் பிரச்சனை இல்லாது இருத்தல்
  • மருந்து மாத்திரை உட்கொள்ளாது இருத்தல்
  • மார்புகளில் வலி இல்லாது இருத்தல்

மேலே கூறியவை உங்களுக்கு பொருந்தினால் உங்களுக்கு தொண்ணூறு சதவிகிதம் உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தான் மருத்துவ ரீதியான கணிப்பு.