சாதாரண கண்களால் பார்த்தால் பெரிதாக ஒன்றும் தெரியாது. அறிவியல் மாணவியாக மாறி, ஆண்களை உங்கள் பாடபொருளாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் உங்கள் மனநிலையை மாற்றி, பெண் என்கிற பிரக்ஞையை விட்டு வெளியேறி, முற்றிலுமாய் விஞ்ஞான பூர்வமாய் ஆண்களை அணுக வேண்டும். அதனால் சாதாரண பெண்பால் கண்களை தொடைத்துவிட்டு, பாலினமே இல்லாத விஞ்ஞான கண்களால் ஆண்களை கவனியுங்கள்.
பறவைகள், விலங்குகள், கடல் பிராணிகள் மாதிரியான வற்றை பார்க்கவாவது காடு, மேடு, குளம், கடல் என்றெல்லாம் போய் மெனக்கெட வேண்டும். ஆனால் இந்த ஆண்-வாட்சிங் இருக்கிறதே, எந்த விதமான சிரம்முமே இல்லாமல் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே ஜோராய் செய்து விடும் சுலபமான பொழுதுப்போக்கு இது.ஆனால் இது வெறும் ஒரு பொழுது போக்கு மட்டும் அல்ல, இது ஒரு சயின்ஸ், அறிவியல் துறை என்பதால், சும்மா போகிற வருகிற எல்லோருக்கும் இந்த சமாசாங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட முடியாது. ஆண்-வாட்சிங் மாதிரியான மிக உயர்நிலையான இந்த பாடங்களை கற்றுக்கொள்ள உங்களுக்கு பல அடிப்படை தகுதிகள் இருந்தாக வேண்டும்.
உணர்ச்சிவசப்படுதல்
தமிழ் சமுதாயம் என்ன தான் கலை, இலக்கியம், தொழில்நிட்பம், மாதிரியான பல துறைகளில் அந்த காலத்திலேயே பெரிய சாதனைகள் செய்திருந்தாலும், அறிவியலில் நாம் புதிதாக, பெரிதாக எதையும் கண்டுபிடித்துவிடவில்லை. காரணம் அறிவியலில் ஈடுபட உணர்ச்சியற்ற மனநிலை தேவைபடுகிறது. நமது சமுதாயமோ உணர்ச்சிக்கு மட்டுமே பெரிய முக்கியத்துவம் தந்து வருவதால், உணர்ச்சிகளை மறந்து முழுக்க முழுக்க அறிவு பூர்வமாய், ஏன் எதற்கு எப்படி, எதனால் என்று கேட்டு, விடைகளை தேடும் பக்குவம் நமக்கு லேசில் சாத்தியமாவதில்லை. மனித மூளையின் டிசைன் எப்படி தெரியுமா? அடி மூளை உணர்ச்சி வசப்படும், மேல் மூளை பற்றற்று யோசிக்கும். எரிப்ரொருள் சிக்கனத்திற்காக, இந்த இரண்டில் ஒன்று வேலை செய்தால் இன்னொன்று ஆஃப் ஆகி விடும்படியாக தான் மூளை வடிவமைக்க பட்டுள்ளது. அதனால் தான் உணர்ச்சிவசப்படும் போது, தெளிவாக யோசிக்க முடியாமல் போகிறது. அதுவே அறிவியல் நோக்கோடு யோசிக்கும் போது, உணர்ச்சிகள் ஏற்படுவதில்லை. அதனால் ஸ்கிதிகாள், இந்த உணர்ச்சி மூளையை ஆஃப் செய்துவிட்டு, வெறும், அறிவு மூளையை ஆன் செய்யும் போக்கை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள்.
விமர்சனமற்ற மனநிலை
நம் ஊரில் இது ஒரு பழக்கம். நமக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அது பற்றி, முழுதாய் தெரியுமோ, தெரியாதோ, ஆனால் எல்லாவற்றை பற்றியும் முன் கூட்டியே ஒரு அபிர்ராயத்தை, preformed conclusionனை ஏற்படுத்திக்கொண்டு விடுவோம். அந்த அபிப்ராயத்தை தவறு சரி என்று சீர்தூக்கிபார்க்காமல் விடாபிடியாக பிடித்துக்கொண்டே இருப்போம். இந்த அணுகுகுறை ஆண்-வாட்சிங் என்கிற நமது ஆட்டத்திற்கு கொஞ்சம் கூட சரிபடாது. எந்த பாடபொருளானாலும், அதை அதனுடைய சுபாவத்தோடே ஏற்றுக்கொண்டு, சரி தவறு என்று ஓவராய் விமர்சனம் செய்யாமல், எது எப்படி இயங்குகிறதோ, அதனை அப்படியே கவனித்து கொள்வது முக்கியம். அப்புறம் தானே, இப்படி இயங்குவதை வேறு எப்படி எல்லாம் மாற்றி இயக்கலாம் என்று யோசிக்கவே முடியும்!
குற்றம் கண்டுபிடிக்கும் போக்கு
உலகில் உள்ள ஜீவன்கள், வஸ்துக்கள், ஜந்துக்கள் என்று எல்லாமே வேவ்வேறு விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்குகின்றன. புள் உயிர் தான், ஆனால் மான் அதை சாப்பிடுவதை பாவம் என்று கருதுவதில்லை. மானும் ஒரு உயிர் தான், புலி மானை சாப்பிடுவதை பாவம் என்று நினைப்பதில்லை. இரண்டும் உயிர்கள் தானே என்று மான் புலியை சாப்பிடுவதில்லை, புலியும் புள்ளை சாப்பிடுவதில்லை. அதே போல, இரண்டும் மான் தான் என்றாலும் ஆண் மானின் சுபாவமும் பெண் மானின் சுபாவமும் வெவ்வேறு. புலிகளும் அப்படியே. காரணம், ஒவ்வொரு உயிருக்கும், பாலினத்திற்கும் வேறு வேறு விதிகள்- இது தான் இயற்க்கையின் ஏற்பாடு என்பதால், இதை போய், ஹிம்சை-அஹிம்சை, சரி-தவறு, ஞாயம்-அநியாயம் என்றெல்லாம், மனித கண்ணோட்டத்தின் கோட்பாடுகளை இந்த சந்தர்பங்களுக்கு பொருத்தி பார்க்க முயல்வது வெட்டு வேலை மட்டுமல்ல, முட்டாள் தனமும் கூட. அதனால் இந்த சரி-தவறு என்கிற குறுகிய அணுகுமுறையை விட்டு வெளியேறி, அந்த அந்த உயிரை அதன் அதன் இயல்போடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுதல் ரொம்ப முக்கியம்.
பாலியல் மறதி
நீங்கள் ஒரு பெண் என்பதை நீங்கள் மறந்தாக வேண்டும். முடிந்தால் உங்களை ஒரு ஆணாகவோ, அல்லது பாலினமே இல்லாத ஒரு வேற்றுலக அமானுஷயராகவோ கற்பனை செய்துக்கொள்ளலாம். அப்போது தான் ஆண்-பெண் என்கின்ற எல்லைகளை மறந்து, உங்கள் பாலினத்தின் ஓரவஞ்சனைகளை விடுத்து, முழு அறிவியல் கண்ணோட்டத்துடன் மனித ஆணை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.
விளயாட்டு தனமாய் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை.
ஆண்-வாட்சிங் என்பது ரொம்பவே ஜாலியான, தமாஷான, அதே சமயம் ஸ்வாரசியமான சமாசாரம். அதனை முழுவதுமாக என்ஜாய் செய்ய உங்கள் கெடிபிடிகளை விட்டு தொலையுங்கள். புதிய ஊருக்கு போய் அங்குள்ள முன் பின் தெரியாத மனிதர்களோடு பழகி அவர்களது கலாசாரத்தி புரித்துக்கொள்ள போகிறீர்கள் என்று வையுங்களேன். உம் என்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு, ஒரு ஓரமாய் உட்கார்த்து, சீ சீ இதுங்க எல்லாம் மனித் பிறவிகள் தானா! இப்படி இருக்குதுங்களே என்று நீங்கள் ஆயிரம் முறை அலுத்துக்கொண்டாலும், பாதிப்பு, அந்த ஊர்காரர்களுக்கு இல்லை. அவர்களை பற்றி தெரிந்துக்கொள்ள போனவர் நீங்கள் தானே, அதனால் இழப்பு உங்களுக்கு தானே! இதற்கு தான் participant observer என்ற டெக்னிக்கை கையாள சொல்கிறார்கள் மானுடவியல்காரர்கள். அவர்களோடு பழகி, அவர்கள் நடவடிக்கைகளில் பங்கேற்றுக்கொண்டே அவர்களை புரிந்துக்கொளவது தான் மிக சிறந்த யுத்தி! அதனால் ஆண்-வாட்சிங் என்கிற அரிய விஷயத்தை கற்றுக்கொள்ள போகும் அதிர்ஷடசாலிகளே, இறுக்கம் தளருங்கள். ஈஸியாக இருங்கள். விளையாட்டு தனமாய் இருங்கள். ஆண்களோடு உறவு, வேலை, வியாபாரம், கல்வி, கூட்டு முயற்சி என்று எல்லா துறைகளிலும் பங்கு பெறுங்கள். அப்படியே ஸைட் பை ஸைட் அவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை உணர்ச்சிவசப்படாமல், விமர்சிக்காமல், குற்றங்கண்டுபிடிக்காமல், பெண்பாலின கண்ணோட்டமில்லாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டே இருங்கள்.
உங்கள் மனதிற்கு ஏற்கனவே தெரியாதவற்றை உங்கள் கண்கள் பார்ப்பதே இல்லை. இத்தனை நாட்களாக, உங்கள் மனதுக்கு புரியாததால் நீங்கள் கவனிக்கத்தவறிய பல விஷயங்கள் இனி உங்கள் ஞான திரிஷ்டியில் தெரிய வரும். இப்போது பாருங்களேன், மனித ஆணின் உலகம் மாயகண்ணாடி மாதிரி அப்படியே உங்கள் கண் முன் தெரியும். இத்தனை நாட்களாக கூடவே இருந்தும் இது வரை நீங்கள் கவனியாத எத்தனையோ புதிய புதிய விஷயங்கள் இப்போது உங்கள் கண்ணில் படும்.
