செக்ஸ் : ஒரு புள்ளி விவரம்



உண்மையாலுமே நாம் எதுக்கு செக்ஸ் வச்சிக்கிறோம்னு பார்த்தா, பாலுணர்வு தூண்டப்படுவதால்  அப்படின்னு ஒரு நேரடியான காரணமிருந்தாலும், நம் சந்ததியை உருவாக்க அப்படின்னு ஒரு அறிவியல் பூர்வமான காரணம் ஒன்னு இருக்கு!

உலகத்துலேயே மிக அதிகமான குழந்தைங்கள பெற்ற பெண்மணி யாரு தெரியுமா ? அவங்க 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ரஷ்யப் பெண். உலகத்துலேயே அதிகமான குழந்தைங்கள பெற்ற பெண் அப்படிங்கிற உலக சாதனை படைச்சவங்க! அவங்களுக்கு மொத்தம் 69 குழந்தைங்க! இந்த குழந்தைங்கள மொத்தம் 27 பிரசவத்துல, 16 இரட்டைக்குழந்தைகள், 7 மூன்று குழந்தைகள் மற்றும் 4 முறை நான்கு குழந்தைகள் வீதம் பெற்றெடுத்துருக்காங்க.

உலகத்துலயே அதிகமான குழந்தங்களுக்கு அப்பா அப்படிங்கிற கின்னஸ் சாதனையை படைச்சு கலக்கிட்டார்ல?! அவரு 17- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மொராக்கோ நாட்டு மன்னர். நம்மாளு மொத்தம் 342 மகள்கள், 525 மகன்கள், ஆக 867 குழந்தைங்களுக்கு அப்பா.


40 வயதான சுமார் 5 விழுக்காடு ஆண்களும், 15-25 விழுக்காடு 65 வயதான ஆண்களும் “எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன்” அப்படிங்கிற ஒரு பிரச்சினையை அனுபவிக்கிறாங்களாம்!

சராசரியா மக்கள் தங்கள் கற்பை எந்த வயசில இழக்கிறாங்க?
அமெரிக்க ஆண்கள் 16.9 வயசிலயும், பெண்கள் 17.4 வயசிலயும் தங்கள் கற்ப்பை இழக்கிறாங்களாம். இதுக்கு மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள் கூட அடிப்படையா இருக்க்லாமுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க!

கல்யாண ஆன எத்தன பேரு நிம்மதியா தூங்கறாங்க?
அமெரிக்காவுல, கல்யாணமான ஆண்/பெண்கள்ல பத்துல ஒருத்தர் (12 விழுக்காடு) தாங்கள் இரவில் தனியாக தூங்கறதா சொல்லியிருக்காங்க!

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் உச்சகட்டதை (ஆர்கஸம்) அடைவீங்களா?

இந்த கேள்விக்கு, 75 விழுக்காடு ஆண்கள் ஆம் என்றும், வெறும் 29 விழுக்காடு பெண்கள் ஆம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்!

“அந்த” மாதிரி சுகம் மட்டும் கொடுக்கிற நண்பர்கள் இருக்காங்களா?
மூன்றில் இரண்டு பங்குஅமெரிக்க கல்லூரி மாணவர்கள் ” அந்த மாதிரி” நண்பர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், அந்த மாதிரி நட்புக்கு கமிட்மென்ட் இல்லாத ஒருவர் அவசியம் அப்படின்னும் சொல்லியிருக்காங்க! அதுமட்டுமில்லாம, நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட 50 விழுக்காட்டினர் எல்லா விதமான காம விளையாட்டுகளிலும் ஈடுபட்டதாகவும், 22.7 விழுக்காட்டினர் புணர்ச்சி மட்டும் வைத்துக்கொண்டதாகவும், 8 விழுக்காட்டினர் புணராமல், இன்ன பிற கேளிக்கைகளில் மட்டும் ஈடுபட்டதாகவும் சொல்லியிருக்காங்க!

இதுவரைக்கும் எத்தனை செக்ஸ் பார்ட்னர் இருக்காங்க உங்களுக்கு?
இந்தக் கேள்விக்கு, 20-50 வயதுக்குட்பட்ட பெண்கள் 4 செக்ஸ் பார்ட்னர் என்றும், ஆண்கள் 7 என்றும் சொல்லிருக்காங்க!

செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு செக்ஸ் சம்பந்தமான தொற்று நோய்கள் வருமா?
தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுவோரில், குறைந்தது 50 விழுக்காட்டினருக்கு “HPV Infection” (Human Pappilloma Virus) அப்படிங்கிற ஒருவித வைரஸ் கிருமியால வர்ர நோய் வாழ்க்கையில ஒரு முறையாவது வருமாம்! இந்நோயை இரு வகையாக பிரிக்கலாம். இரண்டு வருடங்களில் குணமாகக்கூடிய ஆபத்தில்லாத நோயாகவும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நோயாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறதாம்! கவலைப்படாதீங்க, 90 விழுக்காடு வரை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின்மூலம் இந்நோயை விரட்டி அடித்துவிடலாமாம்!