அமெரிக்காவின் இருதய அமைப்பின், இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு குறித்த ஒரு சமீபத்திய கருத்தரங்கில் நாம் மேலே பார்த்த கேள்விக்கான விடை குறித்து செய்திகள், கருத்துகள் வெளியிடப்பட்டது. அக்கருத்தரங்கில், மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், சுமார் 60% பெண்களும், மாரடைப்பு ஏற்பட்ட ஒரு வருடத்துக்குப் பின் செக்ஸில்/உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டனர் என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டது!
“உடலுறவு/செக்ஸில் ஈடுபடுவது இருதயத்துக்கு பாதுகாப்பானது/நல்லது; மாரடைப்புக்கு பின்னும்” என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
“ஒருவர், உடலுறவின்போது இறப்பதற்க்கான வாய்ப்பு மிக மிக குறைவு; அது மாரடைப்பால் பாதிக்கப்பட்டவராயிருப்பினும்” என்கிறார் சிக்காகோ பல்கலைக்கழக மருத்துவர் ஸ்டேசி லின்டா (Dr. Stacy Lindau of the University of Chicago)
சினிமாவில் காண்பிப்பது போல, உடலுறவின் இறப்பது என்பதற்க்கான வாய்ப்பு, நிஜ வாழ்வில் மிக மிக குறைவு. அதனால், அதைப்பற்றிய கவலை தேவையில்லாதது!!
credit: medicinenet.com and gandhhiji40/flickr
“பெரும்பாலான மருத்துவர்களின் கருத்துப்படி, ஒரு இருதய நோயாளி மிதமான உடற்பயிற்ச்சிக்கு தயார் நிலையில் இருக்கிறார் என்றால், அவர் செக்ஸ்/உடலுறவுக்கு தயார் என்றே அர்த்தம்! ஏனென்றால், செக்ஸ்/உடலுறவும்கூட இரு மிதமான உடற்பயிற்ச்சியே”, என்கிறார் மிஸ்ஸூரி பல்கலைக்கழக மருத்துவர் ஜான் ஸ்பெர்டஸ் (Dr. John Spertus of the University of Missouri in Kansas City)
அதெல்லாம் சரி, உடற்பயிற்ச்சியைப் பத்தி வெளிப்படையா/கூச்சப்படாம பேசிடலாம். உடலுறவு/செக்ஸைப் பத்தி வெளிப்படையா பேச முடியுமா? (எத்தனை பேரு பெசுறாங்க நம்ம சமுதாயத்துல?!)
இப்படியொரு கேள்விக்கு “முடியாது” அப்படீன்னு ஒரு பதிலை யோசிக்காம கூட சொல்லிடலாம்! இல்லீங்களா?!
ஆக, பேசமுடியாது/பேச மாட்டாங்க அப்படீங்கிற பட்சத்துல, இம்மாதிரியான சந்தேகங்களும், அதற்க்கான விடையில்லா நிலையும் ஒரு தொடர்கதையாகவே இருக்குமே தவிர, முடிவுக்கு வராது. ஆனா, இங்கே பிரச்சினை அதில்ல! இம்மாதிரியான சந்தேகங்கள் ஒருவரை மனதளவிலும், உடலளவிலும் எந்த அளவுக்கு பாதிக்கிறது, அதனால் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு குறைந்துபோகிறது என்பதை கவனத்தில் கொள்கிறார்கள் மருத்துவர்கள்!
சுமார் 1,760 மிகவும் பாதிக்கப்பட்ட மாரடைப்பு நோயாளிகள் பங்குபெற்ற இந்த ஆய்வில், பாதிக்கும் குறைவானவர்களே உடலுறவில் ஈடுபடுவது குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்களாம். குறிப்பாக, பெண்கள் இம்மாதிரியான சந்தேகங்களை எழுப்ப தயங்குகிறார்களாம்! மருத்துவரே, உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சினை ஒன்றுமில்லை என்று சொல்லாத பட்சத்தில் இருதய நோயாளிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை தவிர்க்கிறார்களாம்!
உங்கள்ல சில பேர் யோசிக்கலாம். செக்ஸ்/உடலுறவில் ஈடுபடலைன்னா, உயிரா போயிடும்? வாழ்க்கையில அனுபவிக்க செக்ஸ் தவிர வேற ஒன்னுமேயில்லையா? அப்படீன்னு…..
“இருதய நோயாளிகளைப் பொருத்தவரை, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அவர்கள் திரும்பப் பெருவதே இங்கு குறிக்கோள். அது, மாரடைப்புக்கான வாய்ப்புகள், ஆபத்துகள் போன்றவற்றை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை கூட்டுவதாலும்தான். செக்ஸ் வாழ்க்கைத்தரமும் சேர்ந்ததே ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம்” அப்படீன்னு சொல்றாரு மருத்துவர் ஸ்பெர்டஸ்!