1960-ல் இருந்து பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பயன்பாடு வழக்கத்துல இருக்கு. ஆனா, என்னதான் விஞ்ஞானம் முன்னேறி இருந்தாலும் ஆண்களுக்கு ஒரு கருத்தடை மாத்திரை உருவாக்க முடியலயே அப்படீங்கிற ஆதங்கம்?!செக்ஸ் துறை சார்ந்த ஆய்வாளர்கள்/விஞ்ஞானிகளுக்கு இதுவரைக்கும் இருந்தது.
ஆண்களுக்கும் “கர்ப்பத்தடை மாத்திரைகள்” உருவாக்கலாம் அப்படீங்கிற சாத்தியக்கூறுகள் இருக்குன்னு சமீபத்துல மேற்கொண்ட ஒரு ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க இங்கிலாந்தின் குயின்ஸ் மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த மிச்செல்லி வெல்ஷ்!
அதுமட்டுமில்லாம,விந்தணுக்கள் குறைபாடுள்ள ஆண்களுக்கு விந்தணுக்கள ஆதிகரிக்கிற சிகிச்சை முறைகளையும் உருவாக்குற வாய்ப்புகள் இருக்குன்னு இந்த ஆய்வில கண்டுபிடிச்சிருக்காங்க!
