சினை முட்டை முதிராமல் வெளியாவதற்கு மூளையும் காரணம்


குழந்தைப் பேறுக்குக் காத்திருக்கும் பெண்ணுக்கு,முதிர்ந்த சினை முட்டை வெளியாகி அது கணவனின் விந்தணுவுடன் சேர வேண்டும்.

இதனால் தான் குழந்தைப்பேறு அளிக்கும் மருத்துவத்தில் பெண்ணின் சினைப் பையிலிருந்து வெளியாகும் முதிர்ந்த சினை முட்டைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இத்தகைய முதிர்ந்த சினை முட்டை வெளியாவதில் மூளையில் உள்ள ஹைபோதலாமஸ்-பிட்யூட்டரி சுரப்பி, கழுத்துப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி ஆகியவற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு.

பிட்யூட்டரி சுரப்பியின் ரசாயனச் செயல்பாடுகளில் சமச்சீரின்மை ஏற்படும் நிலையிலோ அல்லது காயம் காரணமாக போதுமான அளவு பிட்யூட்டரி சுரப்பி சுரக்காவிட்டால் அல்லது சினைப் பை ஊக்கி ஹார்மோனை அளவுக்கு அதிகமாகச் சுரந்தால் சினைப் பையால் முதிர்ந்த சினை முட்டையை வெளியிட முடியாது.