ஆண் குறி வளைந்துள்ளதா?


உங்களுக்கு உடலில் எந்தக் கோளாறும் இல்லை. இது ஒரு நோய் கிடையாது. பெரும்பாலான ஆண்களுக்கு, ஆண் குறி, இடது பக்கமோ, வலது பக்கமோ, மேல் நோக்கியோ வளைந்தே தான் இருக்கும். வெகு குறைந்த பட்சமான ஆண்களுக்குத்தான் ஆண் குறி வளையாமல், நேராக இருக்கும்.

இது தவிர சுய இன்பம் (கை முட்டி) செய்தால், ஆண் குறி வளைந்து விடும் என்று நம்பப் படுகிறது. இந்த நம்பிக்கை ஆதாரமற்றது, மருத்துவர்கள் இந்தக் கூற்றை ஒப்புக் கொள்வதில்லை.

பெரும்பாலான பெண்களுக்கு, உங்கள் ஆண் குறி வளைந்திருப்பதை உடலுறவின் போது, உணரக் கூட முடியாது. நீங்கள் வாய் வழி, பெண்ணுறுப்பு வழி, மல வழிப் புணர்ச்சி என்று எதை செய்தாலும் அவர்களால் எந்த வித வித்தியாசத்தையும் காண முடியாது. இதனால், உங்கள் காதலி அருவருப்பு அடைவாள், அல்லது கேலி செய்வாள் என்று வருத்தப்படுவதை விட்டு விடுங்கள்.

வெகு சில ஆண்களுக்கு, ஆண் குறி 40 டிகிரிக்கு மேல் வளைந்து இருக்கும், இது Peyronie’s Disease எனப்படும் ஒரு நோயாகும்.