ஆண்குறி அளவு

குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்று நினைக்கும் சில ஆண்கள், உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்க வேண்டும். இது ஒரு சராசரி அளவு.

குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மருத்தவர் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் இந்த அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது.

நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல்.