உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்

- 1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
- 2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal)பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
- 3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவுசிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..
- 4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில்வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும்உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
- 5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும்.